மீடியா சேவைகள்

இணைய ஊடகம் தொடர்பான ஆலோசனைகள் சேவைகள் கிடைக்கும்.

Nesam Media Online Media Service

இணைய தள வானொலி என்பது ஆன்ட்ராய்ட் மொபைல்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மிகுந்த வரவேற்பை பரவலாகப் பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கேட்க முடியும் என்பதாலும்,கிராமங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரை அனைவரும் இணைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாலும் இணைய தள வானொலியை தொடங்கி வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நகரத்தையோ அல்லது ஒரு மாவட்டத்தையோ மையமாக வைத்து இணைய தள வானொலி நிகழ்ச்சிகளை வழங்கலாம்.

ஆன்மீகம்,இலக்கியம்,கல்வி,பொழுதுபோக்கு,வர்த்தகம்,சமூக மேம்பாடு,மகளீர் குழந்தைகள் நலம்,அறிவியல்,தொழில் நுட்பம்,மரபு,பண்பாடு,கலை என பல தரப்பட்ட பயனுள்ள நிகழ்ச்சிகளை இணைய வானொலிகள் முலமாக வழங்கலாம்.

வளரும் கலைஞர்களை,சிறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கலாம்.

மக்களுக்கு மன ஆறுதல் தருவதில் வானொலிக்கு நிகரான வேறொரு ஊடகம் இல்லை.

வருவாய் வாய்ப்பு :

நிகழ்ச்சிகளுக்கிடையே வர்த்தக
விளம்பரங்களை ஒலிபரப்பி வணிக வளர்ச்சி மேம்படுவதற்கு
இணைய வானொலியை சிறப்பாக பயன்படுத்த முடியும்.

சிறுதொழில் முனைவோரை சந்தித்து அவர்களின் உற்பத்திப் பொருட்களின் தனிச்சிறப்புகளைப் பற்றி வானொலியில் விளக்கமாக பேசி உள்ளூர் வணிகத்தை வளர்க்கவும்,உலகலாவிய அளவில் தொழில் முனைவோரை அறிமுகப்படுத்தவும் வானொலியை பயன்படுத்தலாம்.

இணைய வானொலி தேவையானவை :

மிகச் சிறிய முதலீட்டில் இணைய தள வானொலிக்கான தொழில்நுட்பம் சார்ந்த தேவைகள் அனைத்தையும் நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.

நமது வானொலி தனக்குரிய பிரத்யேக அங்கீகாரத்தை பெறுவதற்கு ஒரு “பிராண்ட் “
பெயரை உருவாக்க வேண்டும்.

அதற்காக நம் இணைய வானொலி ஊடகத்திற்காக
1.ஒரு இணைய தளம்,
2.ஒரு ஆன்ட்ராய்டு செயலி,
3.இணைய வானொலி சர்வர்,
4.கணிணியில் நேரலை வழங்கும் மென்பொருள்,
5.மொபைல் மூலம் நேரலை செய்வதற்கான மொபைல் செயலி,
6.ஒலிப்பதிவு செய்வதற்கான தரமான மென்பொருள்
ஆகியவை தேவை.

அனைத்து தொழில்நுட்பங்களையும் உருவாக்க எங்களை அழைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *